Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மலையகத்தில் மர்ம நபர்களின் அட்டூழியம்: லொறி தீ வைத்து எரிப்பு

In இலங்கை
Published: 13:24 GMT, Oct 21, 2017 |
0 Comments
1140
icon_com
This post was written by : Risha

வெலிமடை திமுத்துகம பகுதியில் வீட்டிற்கு அருகாமையில் நிறுத்தி வைத்திருந்த லொறி ஒன்றினை இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு எரிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அதிகாலை வேளையில் லொறி எரியும் வெளிச்சத்தினைக் கண்ட வீட்டின் உரிமையாளர், அயலவர்களின் உதவியுடன் தீயை அணைத்த போதிலும், லொறி முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg