Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விளையாட்டு நிகழ்வுகள் வரவேற்கத்தக்கது: மட்டு.ஆயர்

In இலங்கை
Published: 14:39 GMT, Oct 21, 2017 |
0 Comments
1169
icon_com
This post was written by : Ravivarman
DSC06373

இலங்கையில் இனங்களிடையே ஒற்றுமையினையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் விளையாட்டு நிகழ்வுகளை வரவேற்பதாக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா யோசப் ஆண்டகை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுத்துறையின் தந்தையென வர்ணிக்கப்படும் அருட்தந்தை வெபர் அடிகளாரின் ஞாபகார்த்தமாக மைக்கேல்மென் விளையாட்டுக்கழகம் நடத்தும் இலங்கையில் உள்ள பிரபல கழகங்கள் பங்குபற்றும் மாபெரும் கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஆரம்பமானது.

49வது ஆண்டாகவும் இந்த சுற்றுப்போட்டியை மைக்கேல்மென் விளையாட்டுக்கழகம் புனித மைக்கேல் கல்லூரியின் கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தில் நடத்துகின்றது.

இதன் ஆரம்ப நிகழ்வு மைக்கேல்மென் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான பி.எம்.சுலோக்சன் தலைமையில் நடைபெற்றதுடன், இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை, மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜயக்கொட ஆராய்ச்சி, புனித மைக்கேல் கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா, கல்லூரியின் அபிவிருத்திக்குழு தலைவர் ஜெகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த கூடைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் இலங்கையில் உள்ள மட்டக்களப்பு, காலி, புத்தளம், பதுளை ஆகிய மாவட்டங்களில் இருந்து முன்னணிக் கழகங்கள் பங்குபற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

DSC06433 DSC06414 DSC06397 DSC06390 DSC06356

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg