Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

`மெர்சல்’ படத்தின் தெலுங்கு பதிப்பான `அதிரிந்தி’ எதிர்வரும் 26-ஆம் திகதி வெளிவருகிறது.

In சினிமா
Updated: 11:06 GMT, Oct 22, 2017 | Published: 11:06 GMT, Oct 22, 2017 |
0 Comments
1376
This post was written by : Rajinthan

 

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் சர்சைகளுக்கு இடையே வரவேற்பை பெற்றிருக்கும் `மெர்சல்’ படத்திற்கு இடையே விஜய்யின் அடுத்த வேளியீடாக `மெர்சல்’ படத்தின் தெலுங்கு பதிப்பான `அதிரிந்தி’ வெளியிடுவது  குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி சர்சைகளுக்கு இடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் படம் `மெர்சல்’ ஸ்ரீ தேனாண்டான் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் மருத்துவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பழிவாங்கும் கதை என்றாலும் மத்திய-மாநில அரசுகளை தாக்கும் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன.

மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களை கிண்டல் செய்யும் காட்சிகளுக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவற்றை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பா.ஜனதா வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்ததால் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாகவும் பா.ஜனதாவுக்கு எதிராகவும் பல அரசியல் கட்சிகள் களம் இறங்கின. திரைத்துறையினரும் `மெர்சல்’ படத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இறுதியில் படத்தில் இருந்து எந்த காட்சியும் நீக்கப்பட மாட்டாது என்று ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது. இவ்வாறாக படத்தின் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்ததால் `மெர்சல்’ படத்தின் தெலுங்கு பதிப்பான `அதிரிந்தி’ வருகிற 26-ஆம் திகதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg