Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்பெய்னின் தலைமைத்துவ ஆட்சியை ஏற்குமாறு கோரிக்கை

In
Updated: 12:09 GMT, Oct 22, 2017 | Published: 12:09 GMT, Oct 22, 2017 |
0 Comments
1144
This post was written by : Suganthini

ஸ்பெய்ன் அரசாங்கத்தின் தலைமைத்துவத்தின் கீழான ஆட்சியை ஏற்றுக்கொள்ளுமாறு ஸ்பெய்ன் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கதலோனிய மக்களிடம் இந்தக் கோரிக்கையை ஸ்பெய்ன் அரசாங்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்வைத்துள்ளது.

அத்துடன், கதலோனியாவின் பிரிவினைவாத தலைமைத்துவத்தின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிப்பதை கைவிடுமாறும் கதலோனிய மக்களிடம் ஸ்பெய்ன் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஸ்பெய்னிலிருந்து சுதந்திரம் கோரிய கதலோனியாவில் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு இம்மாதம் முதலாம் நடத்தப்பட்டபோது, 2.3 மில்லியன் மக்கள் வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர். இதற்கு ஆதரவாக 90 சதவீதமான மக்களும் எதிராக 43 சதவீதமான மக்களும் வாக்களித்தனர்.

இந்நிலையில், கதலோனிய சுதந்திரப் பிரகடனத்துக்கான ஒப்பந்தத்தில் கதலோனியத் தலைவர் உட்பட அதிகாரிகள் கையொப்பட்டமிட்டனர். இருப்பினும், இதற்கான உத்தியோகபூர்வமான அறிவிப்பை கதலோனியத் தலைவர் வெளியிடவில்லை என்பதுடன், ஸ்பெய்ன் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து, கதலோனிய சுதந்திரப் பிரகடனம் தொடர்பில் பரிசீலனை செய்து அதற்கான முடிவை 5 நாட்களுக்குள் அறிவிக்குமாறு ஸ்பெய்ன் பிரதமர் காலக்கெடு விதித்திருந்தார். இது தொடர்பில் கதலோனியத் தலைவர் உறுதியான முடிவை எடுக்காமையால், அமைச்சரவைக் கூட்டம் நேற்று கூட்டப்பட்டது. அதன்போது, கதலோனிய மாகாண அரசாங்கத்தை கலைத்துவிட்டு அங்கு தேர்தல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, ஸ்பெய்ன் அரசாங்கம் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg