Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

செங்குத்து ஓட்டப் போட்டியில் அவுஸ்ரேலிய வீரர் முதலிடம்

In விளையாட்டு
Updated: 12:27 GMT, Oct 22, 2017 | Published: 12:27 GMT, Oct 22, 2017 |
0 Comments
1235
This post was written by : Kemasiya

சீனாவின் ஷங்காய் நகரில் இடம்பெற்ற செங்குத்து ஓட்டப்ப போட்டியில் அதாவது மாடிப்படி ஏறும் போட்டியில் அவுஸ்ரேலிய வீரர் மார்க் போர்ன் முதலிடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

சீனாவின் வர்த்தக நகராக அறியப்படும் ஷங்காய் நகரில் அமைந்துள்ள 260 மீற்றர் உயரமான சர்வதேச நிதி மையத்தில் மாடிப்படி ஏறும் போட்டி இன்றைய தினம் இடம்பெற்றது.

இந்த போட்டியில் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த 1700 போட்டியாளர்கள் பங்கேற்றியிருந்தனர்.  54 மாடிக்களைக் கொண்ட கட்டடத்தின் 1460 படிகளை ஏறிக்கடப்பதே போட்டியாளர்களுக்கான இலக்கு.

அந்த வகையில் குறித்த இலக்கினை ஆண்கள் பிரிவில் அவுஸ்திரேலியாவின் மார்க் போர்ன் ஏழு நிமிடங்கள் 44 செக்கனில் ஏறி இலக்கினை எட்டியிருந்தார்.

அதேபோல் பெண்கள் பிரிவில் அவுஸ்ரேலிய வீராங்கனை சுசி வோல்ஷம் ஒன்பது நிமிடங்கள் எட்டு செக்கனில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றிருந்தார்.

இந்த நிலையில் இந்தாண்டிற்கான எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி கொங்கோங்கின் 82 மாடிகளைக் கொண்ட 484 மீற்றர் உயரமான சர்தேச வர்த்தக மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

செங்குத்து ஓட்டப் போட்டி கடந்த 2009 ஆம் ஆண்டு சர்தேச போட்டியாக வளர்ச்சி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg