Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டை பிளவுபடுத்தும் அரசியலமைப்பில் கையெழுத்திட மாட்டேன்: சபாநாயகர்

In இலங்கை
Updated: 06:08 GMT, Oct 23, 2017 | Published: 04:20 GMT, Oct 23, 2017 |
0 Comments
1270
icon_com
This post was written by : Anojkiyan
karu

நாட்டை பிளவு படுத்தும் வகையிலான புதிய அரசியலமைப்பில், தான் உயிரோடு உள்ளவரை கையெழுத்திடப் போவதில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மீரிகம பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டை பிளவு படுத்தும் வகையிலான புதிய அரசியலமைப்பில் நான் உயிரோடு உள்ளவரை ஒருபோதும் கையெழுத்திடப் போவதில்லை. நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு திருத்தத்தை நான் இதுவரை பார்வையிடவில்லை.

நாடாளுமன்றில் எவ்வாறான யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் நான் கையெழுத்திட்டால் மட்டுமே அது நடைமுறைக்கு வரும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg