Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சோ்ந்த நால்வா் தீவிர சிகிச்சை பிரிவில்!

In இந்தியா
Published: 09:19 GMT, Oct 23, 2017 |
0 Comments
1296
icon_com
This post was written by : Kemasiya
lpg-blast-300x160

சென்னை கொடுங்கையூரில் உள்ள வீடொன்றில், எரிவாயு சிலிண்டர் வெடித்ததில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த, ரெயில்வே அதிகாரியொருவரின் வீட்டில், நேற்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதில் படுகாயமடைந்த ரெயில்வே அதிகாரி மற்றும் அவரின் மனைவி, மகன், மகள் ஆகியோர், கொடுங்கையூர் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த அயலவர்கள், தீயணைப்பு படையினருக்கு தெரிவித்த தகவலையடுத்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்து வந்து, தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததோடு, விசாரணையையும் மேற்கொண்டனர்.

எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, வீடு முழுதும் பரவி இருந்துள்ளதாகவும், அதை அவதானிக்காமல், அதிகாலையில் எழுந்து வீட்டு மின் விளக்கை போட்ட போது, வெளியேற முடியாமல் அடைத்து கிடந்த எரிவாயு தீ பிடித்ததால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸாரின் விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg