Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெர்சல் குறித்து தெளிவுபடுத்தும் அ.தி.மு.க உறுப்பினர்

In இந்தியா
Updated: 10:07 GMT, Oct 23, 2017 | Published: 10:02 GMT, Oct 23, 2017 |
0 Comments
1155
icon_com
This post was written by : Kemasiya
ob8YOfE4

நாட்டில் மக்கள் நலன்சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் போது, வெறும் வருமானத்தை மட்டும் நோக்கமாக கொண்ட திரைப்படம் குறித்து, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. பேசுவது, அவர்களின் சுய விளம்பரத்திற்காக என, ஆ.அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் வைத்து இன்று (திங்கள்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே, அ.தி.மு.க.வின் புதுவை சட்டப்பேரவைத் தலைவர், ஆ.அன்பழகன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு நிருபர்களிடம் மேலும் தெரிவித்த அவர்,

மெர்சல் படத்தில் மருத்துவத்தில் தொடர்புடைய ஜி.எஸ்.டி குறித்து ஒரு தவறான கருத்து முன்வைக்கப்படுகின்றது. அது கூட தெரியாத சில கட்சியினர், எல்லோரும் விமர்சிக்கின்றனர் என்பதற்காக தாமும் விமர்சிக்கின்றனர்.

தொற்று நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர், பொதுத்துறை நிறுவனத்தில் வேலைபுரியும் பத்தாயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை, இவ்வாறு ஏராளம் பிரச்சினைகள், மக்கள் சார்ந்திருக்கையில், திரைப்படம்  குறித்து கட்சிகள்  பேசிக்கொண்டிருப்பது, கேலிக்கூத்தாக உள்ளதென அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg