Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2.O திரைப்படத்தின் இசை வெளியீடு: டுபாயில் பிரமாண்ட ஏற்பாடுகள்!

In சினிமா
Updated: 10:21 GMT, Oct 23, 2017 | Published: 10:17 GMT, Oct 23, 2017 |
0 Comments
1302
This post was written by : Varshini

லைக்கா புரடக்ஷன் தயாரிப்பில் உருவாகி வரும் 2.O திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, எதிர்வரும் 27ஆம் திகதி டுபாயில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

டுபாயிலுள்ள புர்ஜ் பார்க்கில் (Burj park) நடைபெறவுள்ள இப்பிரமாண்ட இசை வெளியீட்டிற்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக இடம்பெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த இசை நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இன்னிசை நேரலையாக இடம்பெறவுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு மிகப் பிரமாண்டமாக இடம்பெற்றதைப் போன்று, அதற்கு நிகராக இசை வெளியீட்டு விழாவையும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கென 12 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவிலேயே அதிகூடிய பட்ஜட்டில் (400 கோடி ரூபாய்) தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் எதிர்வரும் ஜனவரி மாதம் திரைக்கு வரவுள்ளது. இப் படத்தில் சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

படத்தின் டீசர் எதிர்வரும் நவம்பர் மாதம் 22ஆம் திகதி ஹைதராபாத்தில் வெளியிடப்படவுள்ளதோடு, படத்தின் ட்ரைலர் சுப்பர்ஸ்டாரின் பிறந்த தினமான எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி சென்னையில் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டில் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாகவும், திரைத்துறையின் மிகப்பெரிய சாதனையாகவும் 2.O அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg