Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசிய போர் நினைவகத்தில் கனேடிய பிரதமர் அஞ்சலி!

In கனடா
Updated: 10:55 GMT, Oct 23, 2017 | Published: 10:55 GMT, Oct 23, 2017 |
0 Comments
1208
This post was written by : Risha
3rd-anniversary-parliament-hill-shooting-nathan-cirillo-plaque-flowers

தேசிய போர் நினைவகத்தில் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட வீரருக்கான அஞ்சலி நிகழ்வில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கலந்துக் கொண்டார்.

இதேவேளை, உயிரிழந்த வீரருக்கு அஞ்சலி செலுத்துமாறு பிரதமர் அனைத்து கனேடிய மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

கனேடிய நாடாளுமன்றக் கட்டடம் அமைந்துள்ள பகுதி மீது கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் 22ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில், போர் நினைவகத்தில் கடமையிலிருந்த வீரர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதேவேளையில், தமது உயிரை பணயம் வைத்து நாட்டின் பாதுகாப்பிற்காக உழைத்துவரும் கனேடிய படையினருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கனேடியர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவதே இத்தாக்குதல்தாரிகளின் நோக்கம். ஆனால், இவ்வாறான தாக்குதல்கள் மக்கள் மத்தியில் பாகுபாட்டை ஏற்படுத்துவதற்கு மாறாக ஐக்கியத்தையே தோற்றுவித்துள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg