Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பா.ஜ.க.வில் இணைந்தமைக்கு ஒரு கோடி தந்தார்கள்:படேல் எழுப்பிய சர்ச்சை

In இந்தியா
Updated: 11:11 GMT, Oct 23, 2017 | Published: 11:11 GMT, Oct 23, 2017 |
0 Comments
1195
This post was written by : Kemasiya

‘பா.ஜ.க.இல் இணைவதற்கு, எனக்கு ஒரு கோடி ரூபா தருவதாக கூறினார்கள்’. என படேல் போராட்டக் குழுவை சேர்ந்த நரேந்திர படேல் தெரிவித்துள்ளார்.

“பா.ஜ.கா.வில் சேர்ந்தால் 1 கோடி தருவதாக கூறியிருந்தனர். அதன் முதற்கட்டமாக 10 இலட்சம் தரப்பட்டது.” என நரேந்திர படேல் இன்று (திங்கள் கிழமை) ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் ஹர்திக் படேல் தலைமையில், படேல் சமூகத்தினர் இட ஒதுக்கீடு கோரி இரண்டு ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு விரைவில் சட்டபேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த விவகாரம் முக்கிய தேர்தல் பிரச்னையாக எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், படேல் போராட்ட குழுவைச் சேர்ந்த நிர்வாகிகளான வருண் படேல் உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர். அவர்களில் ஒருவரான நரேந்திர படேல் அக்கட்சியில் இணைந்த பின்னர் மேற்கண்டவாறு ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg