Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டேஷ் குழுவில் இணைந்தோர் கொல்லப்பட வேண்டும் – அமைச்சர் ரோரி

In
Published: 10:41 GMT, Oct 23, 2017 |
0 Comments
1083
icon_com
This post was written by : Suganthini
uk2

டேஷ் பயங்கரவாதக் குழுவில் சேர்வதற்காக சிரியா சென்ற பிரித்தானியப் பிரஜைகளில் சிலர், நாடு திரும்புவதற்கு முன்னர் கொல்லப்பட வேண்டும் என, பிரித்தானியாவின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் ரோரி ஸ்டீவர்ட் (Rory Stewart) தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கிய நேர்காணலின்போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘டேஷ் பயங்கரவாதக் குழுவில் சேர்வதற்காக சிரியா சென்ற பிரித்தானியப் பிரஜைகளில் சிலர், நாடு திரும்புவதற்கு முன்னர் கொல்லப்பட வேண்டும். ஏனெனில், இவர்கள் மீது பிரித்தானிய அரசாங்கத்துக்கு நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது என்பதுடன், இந்த மக்களால் எமக்கு ஆபத்து ஏற்படலாம். ஆகவே, இவர்கள் தொடர்பில் நாம் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்’ என்றார்.

‘பிரித்தானியாவின் பாதுகாப்புக்கு இவர்கள் அச்சுறுத்தலாகக் காணப்படுவதால், இவர்களைக் கையாள்வதற்கான ஒரே வழி அவர்கள் கொலை செய்யப்பட வேண்டும் என்பதே ஆகும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg