Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்தியஸ்த சபை உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் நேர்முகப் பரீட்சை!

In இலங்கை
Updated: 10:47 GMT, Oct 23, 2017 | Published: 10:47 GMT, Oct 23, 2017 |
0 Comments
1191
This post was written by : Ravivarman

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் மத்தியஸ்த சபை உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் நேர்முகப் பரீட்சை இன்று (திங்கட்கிழமை) பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

நீதியமைச்சின் கீழ் செயற்படும் மத்தியஸ்த சபை ஆணைக்குழுவினால் மேற்படி மத்தியஸ்த சபை உறுப்பினர்களை நியமிக்கும் நேர்முகப் பரீட்சை இடம்பெற்றதுடன், இதற்கென இப் பிரதேசத்திலுள்ள சுமார் 40 பேர் பங்குபற்றியிருந்தனர்.

இந்நிகழ்வில் பிரதேச உதவி செயலாளர் எஸ். ராஜ்பாபு, மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் பயிற்சி அலுவலர் யூ.ஐ.எம். ஆஸாத், பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஜெ.ஜெயந்திரன், மத்தியஸ்த சபை ஆணைக்கு முகாமைத்துவ உதவியாளர் ஏ.றம்யா போன்றோர் கலந்துகொண்டனர்.

வவுணதீவு பிரதேச மத்தியஸ்த சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த 2016 டிசம்பர் மாதம் முடிவுற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

A. mediation (4) A. mediation (3) A. mediation (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg