Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரணைதீவு மக்களின் காணிகளை அளவிடும் பணிகள் ஆரம்பம்!

In இலங்கை
Updated: 15:54 GMT, Oct 23, 2017 | Published: 11:10 GMT, Oct 23, 2017 |
0 Comments
1131
icon_com
This post was written by : Ravivarman
1-298

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள இரணைதீவில் மக்களின் காணிகளை அளவீடு செய்வது தொடர்பான அனுமதி கிடைத்துள்ளதாக பூநகரிப் பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்னேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள இரணைதீவுப் பிரதேசம் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதனால் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இரணைமாதா நகரில் தங்கி உள்ளனர்.

1990ம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக வெளியேறிய மக்கள் இரணைமாதாநகரில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தமது சொந்த இடத்தில் மீள்குடியேற அனுமதிக்கக்கோரி கடந்த மே மாதம் 1ம் திகதி முதல் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை அடையாளப்படுத்தி அவற்றை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மேற்படி காணிகளில் 6 நாட்கள் முதல் கட்ட அளவீட்டு பணிகள் இடம்பெறும் எனவும், பின்னர் மற்றுமொரு திகதியில் 2ஆம் கட்டப் பணிகள் இடம்பெறும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது.

அளவீட்டு பணிகள் முடிவடைந்ததும் அது தொடர்பான அறிக்கை மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்னேந்திரன் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg