Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஷாலின் அலுவலகம் வருமான வரித்துறையினரால் சோதனை!

In சினிமா
Updated: 11:38 GMT, Oct 23, 2017 | Published: 11:29 GMT, Oct 23, 2017 |
0 Comments
1236
icon_com
This post was written by : Surenth
vishal

நடிகரும் நடிகர் சங்கத் தலைவருமான விஷாலுக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனா்.

குறித்த சோதனை நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டதாகவும் இதன்போது திரைப்பட நிறுவன கணக்கு வழக்குகள் குறித்து அதிகாரிகள் சோதனையை முன்னெடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், வடபழனியில் உள்ள விஷாலுக்கு சொந்தமான குறித்த தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் சுமார் 3 மணி நேரம் அதிகாரிகள் சோதனையை முன்னெடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்மையில், மெர்சல் திரைப்படம் குறித்து மத்திய அரசு சாா்பானவா்கள் வெளியிட்ட கருத்துக்களை விஷால் விமா்சித்திருந்ததுடன் பா.ஜ.க முக்கிஸ்தர்கள் மீது குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது அவருக்கு சொந்தமான அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg