Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரானின் அணு ஒப்பந்தம் பேணப்படும் – ஜோன்ஸன்

In
Published: 11:25 GMT, Oct 23, 2017 |
0 Comments
1102
icon_com
This post was written by : Suganthini
jonson

ஈரானின் அணுசக்தித்திட்ட ஒப்பந்தத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பதுடன், அந்த ஒப்பந்தம் பேணப்படும் என, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்தபோது, ‘கடந்த 2015ஆம் ஆண்டில் ஈரானுக்கும் 6 நாடுகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட அணுசக்தித்திட்ட ஒப்பந்தம் தொடர்பில் எமக்கு எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை’ என்றார்.

‘எனவே, இந்த ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்கு எமது தலைமுறையினர் முன்வர வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் பரிந்துரைக்கப்படும் நடைமுறைகளை நாம் சிறப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg