Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எலிசபத் மகாராணியின் போர்க் கப்பல் விஜயம்

In
Published: 13:13 GMT, Oct 23, 2017 |
0 Comments
1270
icon_com
This post was written by : elayathambi

எச் எம் எஸ் சதெர்லாண்ட்  போர்க் கப்பலின் 20 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி   எலிசபத் மகாராணி கப்பலுக்கான விஜயத்தை இன்று மேற்கொண்டார்.

0049574B00000258-5008485-image-a-3_1508761067781

லண்டன் கிழக்கிந்திய இறங்கு துறையில் தரித்து நின்ற எச் எம் எஸ்  சதெர்லாண்ட்  போர்க் கப்பல் அதன்  இருபது  ஆண்டு சேவையை நிறைவு செய்துள்ளது. இது குறித்து கப்பலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபச்சாரத்தில் மகாராணியார் பங்கேற்றார்.

மகாராணியாரை கடறபடைத் தளபதி அன்ட்ரூ கனல், கப்பலின் மேற் தளத்தில்  வாழ்த்தி வரவேற்றார். முன்னாள் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் இன்றைய விருந்துபச்சாரத்தில் பங்கேற்றிருந்தனர்.

459A005A00000578-5008485-image-a-1_1508760694147

பிரித்தானிய  எல்லைக் காவலில் தயார் நிலையில் இருக்கும் எச் எம் எஸ்  சதெர்லாண்ட் வழமையாக பிளைமவுத்தில் தரித்திருக்கும். ஐக்கிய இராச்சிய எல்லைக்குள் நுழையும் ரஷ்ய மற்றும் சீனப் போர்க் கப்பல்களுக்கான காவல் பணிகளில் இது ஈடுபடுவதுண்டு.

அடுத்த ஆண்டு முதல் இந்தப் போர்க் கப்பல் புதிய HMS Queen Elizabeth  கப்பலுக்கான பாதுகாப்புப் பணிகளை வழங்கவிருக்கிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg