Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேற்குலக நாடுகளுக்கு வட கொரியா பகிரங்கக் கடிதம்

In
Published: 15:51 GMT, Oct 23, 2017 |
0 Comments
1861
icon_com
This post was written by : elayathambi
nintchdbpict0003562968181

மேற்குலகின் பல நாடுகளுக்கு வட கொரியா ஒரு பகிரங்கக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் வட கொரியாவால் அனுப்பப்பட்டுள்ள இக்கடிதம் பலத்த ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.  `வெறுக்கத் தக்கதும் பொறுப்பற்றதுமான டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் மீது அதீத கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு` இக்கடிதம் மேற்குலக நாடுகளைக் கேட்டுள்ளது.

வடகொரியா முழுமையான அணு வல்லமை மிக்க நாடு  என இக்கடிதம் அறிவித்துள்ளது. வட கொரியாவின் வெளியுறுவுக் குழு ஒன்று இக்கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக தெரிய வருகிறது. எந்தெந்த நாடுகளுக்கு இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதை வட கொரியா வெளிப்படுத்தவில்லை. இன் நிலையில்  இத்தகைய ஒரு  கடிதம் தமக்கு கிடைத்திருப்பதாக அவுஸ்திரேலிய வெளியுறவுத் துறை, முதற் தடவையாக தெரிவித்துள்ளது.

ஜகார்த்தாவில் உள்ள தமது இந்தோனேசிய தூதுவராலயத்திடம் தமக்கான கடிதம் கையளிக்கப்பட்டிருப்பதாக, அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் அறிவித்துள்ளார்.

வழமையாக தமது தேசிய செய்தி நிறுவனமான KCNA மூலம் மேற்குலகிற்குச் செய்திகளை தெரிவிக்கும் வட கொரியா, ஏன் இத்தகைய ஒரு கடிதத்தை அனுப்பியது என்பது தெரிய வரவில்லை.  பலதரப்பட்ட நாடுகளின் நாடாளுமன்றிற்கு என முகவரியிடப்பட்டுள்ள இக்கடிதம் ட்ரம்பை எச்சரித்திருக்கிறது. முழுமையான அணு வல்லமை கொண்ட வட கொரியாவை மண்டியிட வைக்க முடியும் என டொனால்ட் ட்ரம் கருதுவது, அவரின் அறியாமையை வெளிக்காட்டும் ஒன்று என அக்கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg