Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

In இலங்கை
Published: 16:54 GMT, Oct 23, 2017 |
0 Comments
1213
icon_com
This post was written by : Ravivarman

தமிழ் அரசியற் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பீட மாணவர் ஒன்றியம் இன்று (திங்கட்கிழமை) நண்பகல் கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்னால் கோரிக்கை ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இலங்கையின் சிறைகளில் பல இடங்களிலே தமிழ் அரசியற் கைதிகள் விசாரணைகள் இன்றி நீண்டகாலமாக முடிவின்றித் தடுத்து வைக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இவர்கள் தொடர்பாக எந்த விதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளையும் நல்லாட்சி அரசு எடுப்பதாகத் தெரியவில்லை. இதன் செயற்பாடாக வவுனியாவில் இருந்த தமிழ் அரசியற் கைதிகள் மூவரின் வழக்கு அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இது தொடர்பாக அரசும், தமிழ்த் தலைமைகளும் பாராமுகமாகவே இருந்து வருகின்றன. இதனைக் கண்டித்தும், தமிழ் அரசியற் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எஸ். டினேஷ்‪காந்த் தெரிவித்தார்.

விசாரணையின்றி இத்தனை வருடம் சிறையிலடைத்தும் விடுதலை செய்ய இரக்கம் வரவில்லை. நீதி மறுக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி வேண்டும், நிபந்தனை இன்றி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடு நியாயமானதா’ போன்ற பல்வேறு கேள்விகள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.

DSC08624 Pro

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg