Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் புதிதாக அறிமுகமாகும் மெடோலீ

In வணிகம்
Updated: 08:29 GMT, Oct 24, 2017 | Published: 08:28 GMT, Oct 24, 2017 |
0 Comments
1456
This post was written by : Surenth

இலங்கையில் முதற்தர சமையல் எண்ணெய் வர்த்தகநாமமாகத் திகழும் ஃபோர்ச்சூன் (Fortune) உற்பத்திக்கு பின்னாலுள்ள Pyramid Wilmar நிறுவனம் அவுஸ்திரேலியாவில் பிரபலமான பூசி உண்ணும் உணவு வர்த்தகநாமங்களுள் ஒன்றாகத் திகழும் Goodman Fielder Australia நிறுவனத்தின் உற்பத்தியான MEADOWLEA இனை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. Pyramid Wilmar நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் தலைமையில் இந்த அறிமுக வைபவம் கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெற்றது.

சூரியகாந்தி எண்ணெயின் நலச்செழுமையுடன் தயாரிக்கப்பட்ட MEADOWLEA, விட்டமின் A, D மற்றும் E போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் செழுமை நிரம்பியதுடன், அற்புதமான கிரீம் சுவை வழங்கும் பூசி உண்ணும் ஒரு கொழுப்புணவாகும். பூசி உண்ணுதல் (spreading)> சமையல் மற்றும் வெதுப்பிச் சுடுதல் (baking) அடங்கலாக பல்வேறுபட்ட பயன்பாடுகளுக்கு உபயோகிக்கப்படக்கூடிய MEADOWLEA இலங்கையில் நுகர்வோரின் சுவைத் தேவைகளை ஈடு செய்யும் வகையில் விசேடமாக தயாரிக்கப்படுகின்றது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய MEADOWLEA ஒட்டுமொத்த உற்பத்தியின் பெறுபேறு தொடர்பில் இலங்கை நுகர்வோர் மத்தியில் பரீட்சார்த்த சோதனை ஆய்வு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் அபிமானத்தை வெல்லும் ஒரு தயாரிப்பு வடிவம் என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளது. அதியுயர் சர்வதேச தர நடைமுறைகளைப் பேணுகின்ற இந்த உற்பத்தியானது மலிவு விலையில் உள்நாட்டு நுகர்வோரின் ஊட்டச்சத்து தேவைகளை ஈடு செய்ய உதவுகின்றது. இதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் சிறந்த கண் பார்வைக்கு பக்கபலமளித்து, கல்சியம் மற்றும் பொஸ்பரசு ஆகியவற்றை உணவிலிருந்து பெற்றுக்கொள்வதோடு, சிறுவர்களின் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியைப் பேணவும் உதவுகின்றன.

உணவுத் தொழிற்துறையில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான மகிமையைப் பெற்றுள்ள ஒரு நிறுவனமான Goodman Fielder Australia, Pyramid Wilmar Private Limited நிறுவனத்தின் ஒரு இணை நிறுவனமாகும். முத்துராஜவெல என்ற இடத்திலுள்ள Pyramid Wilmar நிறுவனத்தின் அதிநவீன உற்பத்தி ஆலையில் MEADOWLEA தயாரிக்கப்படுவதுடன், நாடளாவியரீதியில் உள்ள விற்பனை நிலையங்களில் மூன்று வேறுபட்ட அளவு கொண்ட பக்கெட்டுக்களில் கிடைக்கப்பெறுகின்றது – 100 கிராம் (ரூபா 90), 250 கிராம் (ரூபா 220) மற்றும் 500 கிராம் (ரூபா 420).

MEADOWLEA உற்பத்தியை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் Pyramid Wilmar நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான சஜாத் மௌசூன் அவர்கள் தனது கருத்தைப் பகிர்ந்து கொள்கையில், ‘இலங்கை நுகர்வோரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் உலகத்தரம் வாய்ந்த உற்பத்திகளை அவர்களுக்கு கிடைக்க வழிவகுப்பதே எமது நோக்கமாகும். பூசி உண்ணும் உணவுகள் (spreads) மற்றும் மாஜரின் வர்த்தகத்தில் Goodman Fielder மற்றும் Pyramid Wilmar ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் அனுபவம் ஆகியன MEADOWLEA உற்பத்தியை இலங்கை மண்ணிலேயே தயாரிப்பதற்கு மூல காரணமாக அமைந்துள்ளன என்பதை மிகுந்த பெருமையுடன் குறிப்பிட விரும்புகின்றேன். Wilmar போன்ற பங்காளித்துவ நிறுவனத்துடன் இணைந்து, இலங்கையில் நுகர்வோரின் வாழ்வில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எமது குறிக்கோளை மூலோபாயம்மிக்க வழிமுறையில் திட்டமிட்டு, முன்னெடுக்க எம்மால் முடிந்துள்ளது,’ என்று குறிப்பிட்டார்.

‘பல தலைமுறைகளாக நம்பிக்கையை வென்றெடுத்து, உலகளாவில் நுகர்வோர் மத்தியில் ஒரு வலுவான வர்த்தகநாமம் என்ற பெயரை MEADOWLEA சம்பாதித்துள்ளது. இலங்கையிலுள்ள அன்னையர் தமது பிள்ளைகளுக்கு மறக்க முடியாத அனுபவங்களைத் தோற்றுவிக்கும் உணவை வழங்குவதற்குத் தேவையான தீர்வை MEADOWLEA வழங்குமென நாம் நம்புகின்றோம். சூரியகாந்தி எண்ணெயின் நலச்செழுமையுடன் ஊட்டச்சத்துரீதியாக மேம்படுத்தப்பட்ட பூசி உண்ணும் ஒரு கொழுப்பு உணவாக இது அமைந்துள்ளதுடன், அத்தியாவசிய நுண்ஊட்டச்சத்துக்களின் செழுமை நிரம்பியது,’ என்று Pyramid Wilmar நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரியான ஹிராந்த் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

ஆசியாவிலுள்ள மிகப் பாரிய, ஒருங்கிணைக்கப்பட்ட விவசாய வர்த்தகக் குழுமமான Wilmar International Limited Pyramid Oil Mills (Pvt) Ltd ஆகியவற்றிற்கு இடையிலான ஒரு கூட்டு வர்த்தகமே Pyramid Wilmar (Pvt) Ltd. 1991 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டு சிங்கப்பூரில் தலைமையகத்தைக் கொண்டுள்ள Wilmar International> சிங்கப்பூர் பங்குச்சந்தையில் சந்தை மூலதனமயமாக்கத்தைப் பொறுத்தவரையில் நிரற்படுத்தப்பட்டுள்ள மிகப் பாரிய நிறுவனங்களுள் ஒன்றாகத் தற்போது தரப்படுத்தப்பட்டுள்ளது.

Palm மற்றும் Lauric சமையல் எண்ணெய்களை விற்பனை செய்து அவற்றை பதப்படுத்துதல், பட்டர் போன்ற பேக்கரி சேர்க்கைப் பொருட்கள், விசேட கொழுப்பு வகைகள் மற்றும் மாஜரின் போன்றவற்றின் உற்பத்தி, சிறு அளவு பக்கட்டுக்களில் நுகர்வோர் சமையல் எண்ணெய்களை தயாரித்தல் மற்றும் சீனி வர்த்தகம் ஆகியன Pyramid Wilmar இன் வர்த்தகச் செயற்பாடுகளாகும்.

இந்நிறுவனம் இலங்கையில் Fortune சமையல் எண்ணெயை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருவதுடன், Masterline பேக்கரி உற்பத்திகளை சந்தைப்படுத்தி அவற்றின் விநியோக நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது. இலங்கையில் Shangri-la ஹோட்டல் செயற்திட்டங்களின் பங்குதாரராகவும் திகழ்ந்து வருகின்றது. Watawala Plantations PLC மற்றும் Watawala Tea Ceylon Ltd ஆகிய நிறுவனங்களின் தாய்நிறுவனமான Estate Management Services (Pvt) Ltd இன் இணை உரிமையாண்மையைக் கொண்டிருக்கும் வகையில் Sunshine Holdings மற்றும் Tata Global Beverages ஆகிய நிறுவனங்களுடன் மூலோபாயப் பங்குடமை ஒன்றையும் Pyramid Wilmar ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

IMG_9316 IMG_9326 IMG_9353 IMG_9422 IMG_9425 IMG_9440 IMG_9492 IMG_9512 IMG_9551 IMG_9617

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg