Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாடசாலை மாணவர்களுக்கு டெப்களை வழங்க நடவடிக்கை!

In வணிகம்
Updated: 10:44 GMT, Oct 24, 2017 | Published: 10:44 GMT, Oct 24, 2017 |
0 Comments
1482
This post was written by : Surenth

பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக டெப்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பாடசாலை, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு இவ்வாறு இலவச டெப்கள் வழங்கப்படவுள்ளதாகவும், இதற்காக அரசாங்கம் 1,95,000 டெப்களை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக 2018ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து வருட இறுதிக்குள் மாணவர்களுக்கு வழங்குவதற்காக மொத்தம் 159, 700 டெப்களையும், ஆசிரியர்களுக்காக 26,000 டெப்களையும், அதிபர்களுக்காக 7,500 டெப்களையும், வழங்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு அவர்களின் கல்விக்கான மேலதிக வசதிகளையும் அனுகூலங்களையும் அரசாங்கம் வழங்கவுள்ளதாகவும் இவ்வாறு வழங்கப்படும் டெப்களை அவர்கள் திரும்ப வழங்க தேவையில்லை என்றும் அகிலவிராஜ் காரியவசம்  கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg