Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டின் உற்பத்தி 4.5 வீதமாக வளர்ச்சி

In வணிகம்
Updated: 11:44 GMT, Oct 24, 2017 | Published: 11:42 GMT, Oct 24, 2017 |
0 Comments
1358
This post was written by : Surenth

ஆசிய அபிவிருத்தி வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பிற்கு அமைய இந்த ஆண்டு முடிவில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 4.5 வீதமாக வளர்ச்சி அடைந்துள்ளதுடன், 2018ஆம் ஆண்டளவில் இது 5 வீதமாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, இவ்வாண்டின் முதற் காலாண்டில் இலங்கையின் GDP ஆனது 3.8 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளதுடன், இரண்டாம் காலாண்டில் 4 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், இந்த ஆண்டின் முதற் காலாண்டில் இலங்கையின் கைத்தொழில்துறையானது 6.3 வீதமாகவும் இரண்டாம் காலாண்டில் 5.2 சதவீதமாகவும் உயர்வடைந்துள்ளது.

இந்த வருட முதல் அரையாண்டில் கைத்தொழில் துறையானது, 5.8 சதவீத வளர்ச்சியையும் புடவை உற்பத்தியானது இவ்வாண்டு இரண்டாம் காலாண்டில் வீழ்ச்சியையும் சந்தித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg