Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியல் கைதிகள் விடயத்தை உள்ளக அழுத்தம் மூலமே தீர்த்திருக்க வேண்டும்: தவராசா

In இலங்கை
Published: 12:18 GMT, Oct 24, 2017 |
0 Comments
1203
icon_com
This post was written by : Risha

அரசியல் கைதிகள் விடயத்தை அரசியல்மயப்படுத்தாமல், உள்ளக அழுத்தங்களின் மூலமே தீர்வு கண்டிருக்க வேண்டும் என வட. மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அவர், ”திருகோணமலை குமாரபுரம் படுகொலை வழக்கில் எதிரிகளுக்கு பாதுகாப்பில்லை எனவும் அரசியல் கைதிகள் விடயத்தில் சாட்சிகளுக்கு பாதுகாப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு வழக்குகள் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டன.

பாதுகாப்பு கொடுக்க வேண்டிய தேவை இருப்பின் அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, வழக்கை மாற்றுவது என்பது நியாயமற்றது. இவ்விரு விடயங்களிலும் சட்ட மா அதிபர் திணைக்களம் முரணான நடவடிக்கைகளையே மேற்கொண்டுள்ளது.

உயர்மட்டங்களுடன் கலந்துரையாடியதிலிருந்து புலப்படுவது என்னவென்றால், இவ்விடயத்தை அரசியல்மயமாக்காது சாதூர்யமாக கையாண்டிருக்க வேண்டும். இதனை அரசியலாக்கி நாம் இங்கு ஆதரவாக கூக்குரலிட, எமது பலத்திற்கு எதிராக பல மடங்கு எதிர்ப்பு தெற்கிலிருந்து கிளம்பியுள்ளது” என்றார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg