Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Updated: 15:00 GMT, Oct 24, 2017 | Published: 15:00 GMT, Oct 24, 2017 |
0 Comments
1277
This post was written by : Sivaguru Siva

கத்தலோனிய பிராந்தியம் மீது ஸ்பெயின் தனது அரசியல் அமைப்பின் 155 வது பிரிவைப் பயன்படுத்துவதற்கு எதிராக கத்தலோனிய அரசு ஸபெயின் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் அவசர முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்யவுள்ளது.

இந்த புதிய தகவலை கத்தலோனியப் பிராந்தியத்தின்  அரச அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ளனர்.

கத்தலோனியா மீது அரசியலமைப்பின் 155 வது பிரிவைப் பயன்படுத்துவதற்குரிய இறுதி அனுமதியை ஸ்பெயின் செனட் சபை எதிர்வரும் வெள்ளியன்று வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கத்தலோனியப் பிராந்தியத்தின் இ;ந்த நகர்வு வெளிப்பட்டுள்ளது.

ஸ்பெயின் செனட்சபை இவ்வாறான ஒரு அங்கீகாரத்தை வழங்கினால் கத்தலோனிய அரசிடமுள்ள நிர்வாகத்தை மத்தியரசு பொறுப்பேற்கும் என எதிர்பார்கப்படுகிறது.

கத்தலோனியாவின் தன்னாட்சி உரிமையை மீளெடுத்துவிட்டு அதனை மத்தியரசின் நேரடி ஆட்சிக்குள் கொண்டுவரவே அரசியல் அமைப்பின் 155 வது பிரிவு பயன் படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

3500

பிரித்தானியாவில் வாழும் ஆளுமை மிகுந்த கறுப்பின பிரபலமாக  ஜினா மில்லர் பதிவாகியுள்ளார். பிரித்தானிய அரசாங்கத்தின் பிரெக்ஸிற் முன்னெடுப்புகளுக்கு சட்டரீதியான சவாலை தொடுத்த வகையில் அவருக்கு இந்த தகுதி கிட்டியுள்ளது.

பிரித்தானியாவில் வாழும் ஆளுமை மிகுந்த நூறு கறுப்பின (கரீபிய பூர்வீகம் உள்ளடங்கலாக)  பிரபலங்களை தெரிவுசெய்யும் தொடர்பான கணிப்பின் போதே ஜினா மில்லருக்கு முதலாவது இடம்கிட்டியுள்ளது

ஒரு தனியார் நிறுவனத்தின் இணை நிறுவுனரில் ஒருவரான ஜினா மில்லர் கயானாவில் பிறந்தவர் ஆனால் பிரித்தானியாவில் வளர்ந்தவர். பிரெக்ஸிற் முன்னெடுப்புகளின்போது பிரித்தானிய அரசாங்கம் ஆட்டிக்கல் 50 எனப்படும் முக்கிய நகர்வை செய்ய முனைத்தபோது அதனை சட்டரீதியான சவாலுக்கு உள்ளாக்கியதன் மூலம் அவர் பிரபலமானார்.

bob-corker

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம் தொலைக்காட்சி செவ்விகளின் போது பொய்களை சொன்னதாகவும் உலக அரங்கில் அமெரிக்கா கொண்டுள்ள பலமான நிலையை பலவீனப்படுத்துவதாகவும் ரெனெசி செனட்டர் பொப் கோர்கர் இன்று பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றைத் தொடுத்தார்.

ஜனாதிபதி டொனால்ட் ரம்ப்பின் குடியரசுக்கட்சியை சேர்ந்த பிரபலமான செனட்டர் பொப் கோர்கர். இந்தநிலையில் ரம்ப் மீது அவர் புதிய குற்றச்சாட்டைத் தொடுத்தமை புதிய பரபரப்பைத் தோற்றுவித்துள்ளது.

அத்துடன் பராயமடைந்தோருக்கான காப்பு மடுவமாக வெள்ளைமாளிகை மாறிவிட்டதாக தான் முன்னர் குறிப்பிட்ட விமர்சனத்தையும் செனட்டர் பொப் கோர்கர் இன்று நியாயப் படுத்தியுள்ளார்.

cbi-1

இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்ட 2ஜி அலைக்கற்றை ( ஸ்பெக்ட்ரம்) முறைகேட்டு வழக்கில் நாளை மத்திய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் (சிபிஐ) தீர்ப்பு வழங்கும் திகதியை அறிவிக்க உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு பிரச்சனையாக அலைக்கற்றை முறைகேடு தொடாபான விடயமும் அது தொடர்பான வழக்கும் இருந்து வந்தது.

டெல்லியிலுள்ள மத்திய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ஓ பி ஷைனி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை முடிந்தது. ஆயினும் தீர்ப்பு வழங்கப்படும் திகதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்டோர் மீதான இந்த வழக்கின் தீர்ப்பு திமுகவுக்கு அரசியல் ரீதியாகவும்இ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg