Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிள்ளைகளை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த தந்தை கைது!

In இலங்கை
Published: 16:02 GMT, Oct 24, 2017 |
0 Comments
1840
This post was written by : Surenth
Child Abuse

மட்டக்களப்பு ஏறாவூர் களுவன்கேணி, பலாச்சோலை கிராமத்தில் தமது இரண்டு பிள்ளைகளை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய தந்தையொருவரை ஏறாவூர் பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) கைதுசெய்துள்ளனர்.

களுவன்கேணி,பலாச்சோலை பாடசாலை வீதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்தே தமது இரண்டு பிள்ளைகளையும் துஸ்பிரயோகப்படுத்தியுள்ளார்.

குறித்த வீட்டில் இருந்த 13வயது சிறுவனும் 10வயது சிறுமியுமே இவ்வாறு துஸ்பிரயோகம் மற்றும் பாலியல்துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிள்ளைகளின் தாய் ஒருவாரத்திற்கு முன்பாகவே தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ள நிலையில் தந்தையின் அரவணைப்பிலேயே பிள்ளைகள் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 22ஆம் திகதி தொடக்கம் இரண்டு பிள்ளைகளும் துஸ்பிரயோகம் மற்றும் பாலியல்துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பிள்ளைகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg