Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோத நடவடிக்கைகளை விரைவில் ஒழிப்போம்! – ரோஹித போகொல்லாகம

In இலங்கை
Published: 04:15 GMT, Oct 26, 2017 |
0 Comments
1330
icon_com
This post was written by : Varshini

இலங்கையின் உணவு உற்பத்தியில் கிழக்கு மாகாணம் பாரிய பங்களிப்பை செலுத்தி வருவின்ற போதிலும், சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக அவை பாதிக்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, திருகோணமலை மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுகின்றமை பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதென்றும், இதனைக் கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இம்மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட்ட தேசிய உணவு உற்பத்திப் புரட்சி தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில், கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இச் சந்திப்பில் ஆளுநர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”நாட்டின் உணவு உற்பத்தியில் கிழக்கு மாகாணமானது பாரிய பங்களிப்பை செலுத்துகின்றது. விவசாயம், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு ஆகிய துறைகளில் நாடளாவிய ரீதியில் கிழக்கு மாகாணமானது 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களை தக்கவைத்துள்ளது.

எனினும், குறித்த துறைகளை பாதிக்கும் வகையிலான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக தடைசெய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன்பிடியில் ஈருபடுவதால் கடலில் மீன்வளம் குறைவடைகின்றது. இதனைக் கட்டுப்படுத்த நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மேலும் எமது நாட்டில் நிலவி வருகின்ற பாரிய பிரச்சனையாக சட்டவிரோத மணல் அகழ்வு காணப்படுகிறது. இது கிழக்கு மாகாணத்திலும் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மணலை வீதி மார்க்கமாக டிப்பர் வண்டிகளில் கொண்டுசெல்வதை தடுப்பதன் மூலம் மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்தலாம். டிப்பர் வண்டிகளில் மணலை கொண்டுசெல்வதன் காரணமாக பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதுடன் வீதி விபத்துக்களும் அதிகரிக்கின்றன.

இதற்கு மாற்றீடாக ரயில் மூலமாக மணல் போக்குவரத்தினை மேற்கொள்வதன் மூலம், இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg