Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீன ஜனாதிபதிக்கு ட்ரம்ப் வாழ்த்து!

In
Updated: 04:43 GMT, Oct 26, 2017 | Published: 04:43 GMT, Oct 26, 2017 |
0 Comments
1192
icon_com
This post was written by : Risha
Trump-xi-af

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டமை தொடர்பில் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சீன ஜனாதிபதியை நேற்று (புதன்கிழமை) தொலைபேசியில் தொடர்புகொண்டு ட்ரம்ப் வாழ்த்து தெரிவி;த்ததாக சீன ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சீ ஜின்பிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பீஜிங்கில் நேற்று நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் சீ ஜின்பிங் கட்சியின் பொதுச் செயலாளாராக இரண்டாவது முறையாக தெரிவுசெய்யப்பட்டார்.

அதன்படி, அவர் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நீடிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் அரசியல் சாசனத்தில் இதற்கான திருத்தம் செய்யப்பட்டு அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg