Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சொந்த மண்ணில் துள்ளுவதா? சிம்பாப்வேயை துரத்தி அடித்தது மேற்கிந்திய தீவுகள் அணி!

In கிாிக்கட்
Updated: 05:47 GMT, Oct 26, 2017 | Published: 05:47 GMT, Oct 26, 2017 |
0 Comments
1275
This post was written by : Anojkiyan

மேற்கிந்திய தீவுகள் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி, 117 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இதன்மூலம் இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில், மேற்கிந்திய தீவுகள் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

கடந்த 21ஆம் திகதி புலவாயோ மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 219 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக சாய் ஹோப் ஆட்டமிழக்காது 90 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் கீறிமர் 4 விக்கெட்டுகளையும், சீன் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளையும் பெற்றுக்கொண்டனர்.

இதனைதொடர்ந்து முதலாவது இன்னிங்சை தொடங்கிய சிம்பாப்வே அணி, 159 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக ஹாமில்டன் மஸகட்சா 42 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் தேவேந்திர பிஷோ 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

60 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, இரண்டாவது இன்னிங்ஸிற்காக 373 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக ரொஸ்டன் சேஸ் 95 ஓட்டங்களையும், க்ரேக் பிரத்வெயிட் 86 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் கீறிமர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் சிம்பாப்வே அணிக்கு 434 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சிம்பாப்வே அணியால் 316 ஓட்டங்கள் மட்டுமே பெறமுடிந்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி, 117 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக டெய்லர் 73 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் தேவேந்திர பிஷோ 4 விக்கெட்டுகளை பெற்றுக்கொண்டார். இப்போட்டியில் ஆட்டநாயகனாக தேவேந்திர பிஷோ தெரிவுசெய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg