Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்தவின் போக்கில் நல்லாட்சி! – விரைவில் நடைமுறைக்கு வரும்

In இலங்கை
Published: 05:38 GMT, Oct 26, 2017 |
0 Comments
1491
icon_com
This post was written by : Varshini
Mahinda_Maithri_2

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்த சில நடைமுறைகளை பின்பற்றுவதற்கு, தற்போதைய அரசாங்கத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது வாழ்க்கைச் செலவு அதிகரித்து நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இவ்வார அமைச்சரவை கூட்டத்தின் போது இவ்விடயம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக, வாழ்க்கைச் செலவு நெருக்கடி தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி அடிக்கடி அலரி மாளிகைக்கு அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடுவதாகவும், இந்த வழியை பின்பற்றுவது சிறந்ததென்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அமைச்சரவையில் எதிர்ப்பு தெரிவிக்கப்படாத அதேவேளை, ஜனாதிபதியும் இணக்கம் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இவ்வாறு அடிக்கடி அழைத்து கலந்துரையாடினால், துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வழியேற்படுமென்றும் ராஜித சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg