Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீதிபதி இளஞ்செழியனை அரசியல்வாதிகளும் பின்பற்ற வேண்டும்: மேர்வின்

In இலங்கை
Updated: 05:54 GMT, Oct 26, 2017 | Published: 05:53 GMT, Oct 26, 2017 |
0 Comments
1375
This post was written by : Varshini
mervin n elancheliyan

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய நீதிபதிகளும் செயற்பட வேண்டுமென்றும், இளஞ்செழியனைப் போன்று அரசியல்வாதிகளும் செயற்பட வேண்டுமெனவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இந்து ஆலயங்களில் மிருகங்களை பலியிடுவது தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள நீதிபதி இளஞ்செழியன், யாழ். மேல் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மிருகங்களை பலியிடுவதற்கு தடைவிதித்து நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டிருந்தார். இது குறித்து கருத்துத் தெரிவித்த போதே மேர்வின் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.

மிருகங்களை பலியிடுவதானது மிருக வதையென நீதிபதி இளஞ்செழியன் குறிப்பிட்டிருந்த நிலையில், அவர் புத்தபெருமானைப் போல முக்தியடைந்தவர் என்றும் மேர்வின் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி இளஞ்செழியனின் பாரபட்சமற்ற தீர்ப்பு மற்றும் அவரது செயற்பாடுகள், தென்னிலங்கை சமூகத்திடம் சிறந்த வரவேற்பை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg