Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிரிக்கெட் போரே எனது இலக்கு: பதவி துறக்கிறார் அவுஸ்ரேலிய பயிற்சியாளர்!

In கிாிக்கட்
Published: 05:53 GMT, Oct 26, 2017 |
0 Comments
1238
This post was written by : Anojkiyan
australia-nets-session_926084a6-80b4-11e7-aa81-8a4dce36eef3

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியை ஆஷஸ் தொடருக்கு தயார் படுத்துவதை இலக்காக கொண்டு தனது பதவியில் இருந்து விலகுவதாக தலைமை பயிற்சியாளர் டர்ரன் லீமன், அறிவித்துள்ளார்.

தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

“அவுஸ்ரேலியாவின் டெஸ்ட் அணியை மட்டும் தான் வழிநடத்த திட்டமிட்டுள்ளேன். மட்டுப்படுத்தப்பட்ட அணிகளை பயிற்றுவிக்கும் எண்ணம் இல்லை. இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் அண்டி பிளவரை பின்பற்றி நானும் இதே முடிவை எடுத்துள்ளேன்” என கூறியுள்ளார்.

இதன் காரணத்தால் ஜஸ்டின் லாங்கர், ரிக்கி பொண்டிங், ஜேசன் கில்லெஸ்பி ஆகியோரில் ஒருவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg