Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிரிக்கெட் சபையே தோல்விக்கு காரணம்: அணியை விட்டு செல்ல விரும்பவில்லை என்கிறார் தரங்க

In கிாிக்கட்
Updated: 09:05 GMT, Oct 26, 2017 | Published: 06:17 GMT, Oct 26, 2017 |
0 Comments
1400
This post was written by : Anojkiyan
tha

பாகிஸ்தான் அணியுடனான தோல்விக்கு தேர்வாளர்கள் மற்றும் கிரிக்கெட் சபையே பொறுப்பேற்க வேண்டும் எனவும், அணியை விட்டு செல்ல தான் விரும்பவில்லை எனவும் இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் உபுல் தரங்க குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றிய இலங்கை அணி ஒருநாள் தொடரில் படுமோசமாக விளையாடி தொடரை 5-0 என பறிகொடுத்து கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், இத்தோல்வி குறித்து அணி தலைவர் உபுல் தரங்க கூறுகையில், “தேர்வாளர்கள் மற்றும் கிரிக்கெட் சபையே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். நான் அணியை விட்டு செல்ல விரும்பவில்லை. அணியை யார் வழி நடத்துவது என்பதை கிரிக்கெட் சபை தீர்மானிக்கும்.

அணித் தலைவர் என்ற வகையில் தோல்விகளுக்கு நான் பொறுப்பேற்க விரும்புகிறேன். துடுப்பாட்ட வீரர்களும் கூட இந்தக் குற்றச்சாட்டுக்கு நியாயமான பங்கை ஏற்கவேண்டும். நாம் ஓர் அணியாக செயற்படவேண்டும். துடுப்பாட்ட வீரர்கள் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் பிரகாசிக்காமல் இருக்க முடியும், ஆனால் அனைத்து போட்டிகளிலும் அவ்வாறு இருக்க முடியாது. நாம் ஓர் அணியாக செயற்படாதபோது திறமையை காட்டுவது கடினமாகும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg