Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிடுவது உறுதி

In இந்தியா
Updated: 06:13 GMT, Oct 26, 2017 | Published: 06:13 GMT, Oct 26, 2017 |
0 Comments
1189
This post was written by : Kemasiya

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் இல்லாவிடினும் தொப்பிச் சின்னத்தில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுவது உறுதி என தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மீண்டும் போட்டியிடுவார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்தின் போது டி.டி.வி. தினகரனுக்கு மக்கள் செல்வாக்கு அதிகமாகவே இருந்தது. இருப்பினும் அவர் தேர்தலில் வெற்றிபெற்று விடுவார் என்ற காரணத்தினாலேயே சிலர் முறைப்பாடு அளித்து தேர்தலை நிறுத்தி விட்டனர். இம்முறை தேர்தல் நடக்கும் போதும் டி.டி.வி. தினகரன் கட்டாயம் போட்டியிடுவார் அதில் எந்த மாற்றமும் இல்லை.இரட்டை இலை சின்னம் கிடைத்தால் அதில் போட்டியிடுவார். இல்லையென்றால் தொப்பி சின்னத்தில் போட்டியிடுவார்’ என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg