Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குண்டு சர்ச்சையை கிளப்பிய விமலுக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு!

In இலங்கை
Updated: 06:22 GMT, Oct 26, 2017 | Published: 06:20 GMT, Oct 26, 2017 |
0 Comments
1336
This post was written by : Varshini

இலங்கை நாடாளுமன்றத்திற்கு குண்டெறிந்தாவது புதிய அரசியல் யாப்பை தடுத்து நிறுத்துவோம் எனத் தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவிற்கு, அவரது சொந்தக் கட்சியிலிருந்தே எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விமலின் கருத்து அவரது சொந்தக் கருத்தே தவிர, கட்சியின் கருத்தல்ல என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான பியசிறி விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இது மிகவும் பாரதூரமானதும் நாடாளுமன்றம் மீது குண்டுத்தாக்குதல் நடத்துவதற்கு ஏனையவர்களை தூண்டும் வகையிலும் உள்ளதென குறிப்பிட்டுள்ள பியசிறி, இதற்கு விமல் வீரவன்ச மன்னிப்புக் கோர வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, விமலின் கருத்து நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதென குறிப்பிட்டுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய, அடுத்த நாடாளுமன்ற அமர்வில் இவ்விடயம் தொடர்பாக விமல் வீரவன்ச விளக்கமளிக்க வேண்டுமெனவும், அதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg