Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரேசிலின் மத்திய மாநிலமான கோயஸ், தேசிய பூங்காவில் காட்டுத்தீ

In உலகம்
Published: 06:27 GMT, Oct 26, 2017 |
0 Comments
1142
icon_com
This post was written by : JudeDanish

பிரேசிலின் மத்திய மாநிலமான கோயஸ், சாப்பாடா டோஸ் வெடேரோஸ் தேசிய பூங்காவில் ஏற்பட்ட காட்டுத்தீயினை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு பணியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த தீப் பரம்பல் காரணமாக இதுவரை 50000 ஹெக்டயர் நிலப்பரப்பு அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஒக்டோபர் 17 ஆம் திகதி ஏற்பட்ட தீ கட்டுக்கடங்காத வகையில் பரவிவருகின்றமையினால் காட்டு வளத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காட்டுத் தீ காரணமாக காட்டின் பல்லுயிர்களுக்கும் அழிவு ஏற்பட்டுள்ளதாக தேசிய வன ஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை தீ பரம்பலை கட்டுப்படுத்தும் வகையில் தீயணைப்பு படையினர் விமானங்கள் மூலம் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை குறித்த தேசிய பூங்காவானது பழமையான நீர் வீழ்ச்சி மற்றும் ஆறுகளைக் கொண்டுள்ளது. மேலும் கடந்த 2001 ஆம் ஆண்டு யுனஸ்கோ அமைப்பு பாரம்பரிய தளமாக குறித்த தேசிய பூங்காவினை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg