Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜம்மு-காஷ்மீர் பகுதியில் தீடீர் இராணுவ சோதனை

In இந்தியா
Updated: 06:29 GMT, Oct 26, 2017 | Published: 06:29 GMT, Oct 26, 2017 |
0 Comments
1216
This post was written by : JudeDanish

ஜம்மு காஸ்மீர் மாநிலம், சோபியன் மாவட்டத்தில் இந்திய இராணுவத்தினால் நேற்றைய தினம் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சோபியன் மாவட்டத்தில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சியின் கிராமத் தலைவர் ஒருவர் தீவிரவாதிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட சோபியன் மாவட்ட கிராமங்களில் ஏற்பட்டுவரும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை அடுத்து 20 கிராமங்களில் இராணுவத்தின் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சோபியன் மாவட்டத்தில் பொது மக்கள், அரசியல்வாதிகள், அரசாங்க உத்தியோகத்தர்களை இலக்கு வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திவருவதை முறியடிக்கும் வகையில் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பிரிகேடியர் ஹர்பிர் சிங் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை ட்ரால் பகுதியில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்திருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg