Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விருதுகளால் ஒன்றிணைந்த கால்பந்து நட்சத்திரங்கள்!

In உதைப்பந்தாட்டம்
Published: 06:38 GMT, Oct 26, 2017 |
0 Comments
1189
icon_com
This post was written by : Anojkiyan
skysports-football-club-soccer_4136444

போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரும், ஸ்பெயினின் தலைசிறந்த கால்பந்து கழகமான ரியல் மெட்ரிட் அணியின் வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றொரு தலை சிறந்த வீரரான லியோனல் மெஸ்ஸியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

நடப்பு ஆண்டின் பிபாவின் சிறந்த வீரரருக்கான விருதை ஐந்தாவது முறையாக பெற்றுள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஏற்கனவே இந்த விருதை ஐந்து முறை விருது வென்ற ஆர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

பிபாவின் சிறந்த வீரரருக்கான விருது பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி, நெய்மர் ஆகியோருக்கிடையில் கடுமையான போட்டி நிலவிய போதும் இறுதியில் ரொனால்டோ சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டார்.

இவ்வருடம் லா லிகா, ஸ்பெயின் சுப்பர் கிண்ணம், ஐரோப்பிய சம்பியன்ஸ் கிண்ணம் ஆகியவற்றை ரியல் மெட்ரிட் அணி கைப்பற்றுவதற்கு ரொனால்டோவின் தொடர் கோல்களே காரணம் என்று கூறினால் அது மிகையாகாது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg