Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மூன்றாவது ஒருநாள் போட்டியில் திறமையை வெளிப்படுத்துவோம்: வில்லியம்சன் சபதம்

In கிாிக்கட்
Updated: 07:06 GMT, Oct 26, 2017 | Published: 07:06 GMT, Oct 26, 2017 |
0 Comments
1318
This post was written by : Anojkiyan

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், திறமையை வெளிப்படுத்துவோம் என நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியா அணிக்கெதிரான நேற்றைய (புதன்கிழமை)இரண்டாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் இத்தோல்வியின் பின் நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் போதுமான அளவுக்கு ஓட்டங்களை எடுக்கவில்லை. இந்த ஆடுகளத்தில் ஓட்டங்கள் எடுக்க கடினமாகவே இருந்தது. இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். 3வது போட்டியில் திறமையை வெளிப்படுத்துவோம்” என கூறினார்.

3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி கான்பூரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg