Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரயில்- லொறியுடன் மோதி விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்

In இந்தியா
Updated: 07:07 GMT, Oct 26, 2017 | Published: 07:07 GMT, Oct 26, 2017 |
0 Comments
1291
This post was written by : Kemasiya

இந்திய ரயில்வேக்கு சொந்தமான ரெயில், பரேலி மாவட்டத்தில் லொறி ஒன்றுடன் மோதி தடம்புறண்டதில், லொறியின் ஓட்டுநர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

லக்னோவிலிருந்து மீரட் சென்றுகொண்டிருந்த ராஜ்ர ராணி எக்பிரஸ் ரெயில், பரேலி மாவட்டத்தின் பிதாம்பார்புர் ரெயில்வே சமிக்ஞை விளக்கை  கடக்கும் போது, எதிர்பாராதவிதமாக ஒரு  லொறியுடன் மோதிக்கொண்டது. இந்தவிபத்து நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து தகவலறிந்த பொலிஸார், மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்புபணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை கடக்கும் பகுதியில் உள்ள ரெயில்வே சமிக்ஞை விளக்கு பகுதி மூடப்படாத்தே, விபத்துக்கு காரணம் என பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்த மேலதிக  விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு  வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg