Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மடகஸ்காரில் பிளேக் நோயால் உயிரிழந்தோர் 124ஆக அதிகரிப்பு

In உலகம்
Updated: 07:14 GMT, Oct 26, 2017 | Published: 07:14 GMT, Oct 26, 2017 |
0 Comments
1267
This post was written by : Risha

மடகஸ்காரில் மிகவும் தீவிரமாகப் பரவிவரும் பிளேக் நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இந்த நோயால் ஆயிரத்து 192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளாகியவர்களில் 54 மருத்துவப் பணியாளர்களும் உள்ளடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மடகஸ்காரின் இரு பிரதான நகரங்களில் கடந்த ஓகஸ்ட் மாதத்திலிருந்து பிளேக் நோய் மிகத் தீவிரமாகப் பரவி வருகின்றது. இந்நிலையில், இந்நோய்த் தொற்றுக்கு உள்ளாகுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

பிரதானமாக இந்த நோய் எலிகள் மூலம் மனிதர்களுக்குப் பரவுவதுடன், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 24 மணித்தியாலத்துக்குள் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், உயிரிழப்புகளை எதிர்நோக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg