Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கேரளா மதுக்கடைகளில் பெண்களுக்கும் வாய்ப்பு: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

In இந்தியா
Updated: 07:44 GMT, Oct 26, 2017 | Published: 07:37 GMT, Oct 26, 2017 |
0 Comments
1351
This post was written by : Kemasiya

கேரளாவில் அரச மதுக்கடைகளில் பெண்களையும் பணிக்கு அமர்த்த வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் உள்ள 350க்கு மேற்பட்ட அரச, சில்லறை மதுவிற்பனை நிலையங்களில், ஆண்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இந் நிலையில், பெண்களையும் பணிக்கமர்த்த கோரி, உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், அரச மதுக்கடைகளில் ஆண், பெண் என பாகுபாடு காட்டக்கூடாது. பெண்களையும் பணிக்கு அமர்த்த வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து, கேரளா எங்கும் மதுபான கடைகளில் பெண்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பான சட்ட தீர்திருத்தங்களை, அம் மாநில அரசு மேற்கொள்ள தயாராகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg