Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவிடமிருந்து சவுதிக்கு பெரும் தொகையான இராணுவ உபகரணங்கள் விற்பனை!

In
Updated: 07:27 GMT, Oct 26, 2017 | Published: 07:27 GMT, Oct 26, 2017 |
0 Comments
1310
This post was written by : Risha
gettyimages-516312974

சவுதி அரேபியாவுக்கு இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில், 1.1 பில்லியன் பவுண்ட் பெறுமதியான இராணுவ உபகரணங்களை பிரித்தானியா விற்பனை செய்துள்ளது.

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் 280 மில்லியன் பவுண்ட் பெறுமதியான இராணுவ உபகரணங்களையும், ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரையான காலப்பகுதியில் 836 மில்லியன் பவுண்ட் பெறுமதியான இராணுவ உபகரணங்களையும் சவுதி அரேபியாவுக்கு பிரித்தானியா விற்பனை செய்துள்ளதாக சர்வதேச வர்த்தகத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

யேமனில் சவுதி அரேபியாவின் தாக்குதல்கள் தொடர்ந்துது வருகின்ற நிலையிலேயே இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன. யேமனில் இடம்பெற்ற தாக்குதல்களில் இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், அங்குள்ள வைத்தியசாலைகள், பாடசாலைகள், நிறுவனங்கள் ஆகியனவும் மோதலினால் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg