Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அக்கறை சுற்றுலா மையத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

In இலங்கை
Updated: 09:06 GMT, Oct 26, 2017 | Published: 09:06 GMT, Oct 26, 2017 |
0 Comments
1266
This post was written by : Elakkiya

கோப்பாய் பிரதேசத்திற்கு உட்பட்ட அக்கறை பகுதியில் அமைக்கப்படும் சுற்றுலா மையத்தினை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

வட.மாகாண சபையின் 108 ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றிருந்த நிலையில் புத்தூர் பிரதேச அக்கறை கிராம மக்கள் ஒன்று கூடி இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது, வருமானத்தினை விட தமிழனுக்கு தன்மானம் முக்கியம் என்றும் தன்மானத்தினை விற்று வரும் வருமானம் வேண்டாம் என்றும் கூறும் பிரதேச மக்கள் சுற்றுலா மையத்தினை சிறுவர் பூங்காவாக மாற்றி அமைக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக மகளிர் விவகார அமைச்சர் உறுதியளித்திருந்த போதிலும் வாக்குறுதியை மறந்து வட.மாகாண சபையின் கடந்த அமர்வின் போது பல அவதூறான கருத்துக்களை முன்வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, இராணுவத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் நிலமையில் அக்கறைப் பகுதி மக்கள் இருப்பதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள், சுற்றுலாத்துறையின் பெயரை நீக்கி சிறுவர் பூங்காவாக பெயர் மாற்றம் செய், எமது பெண்களின் கலாசாரத்தினையும் தன்மானத்தினையும் பாதுகாப்போம், சுற்றுலாத்துறை என்ற பெயரில் மீனவத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே, போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளுடன் கோஷங்களை எழுப்பியவாறு தமது போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

IMG_8096IMG_8091

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg