Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயா மரணம் குறித்த விசாரணையில் தாமதம் ஏன்?

In இந்தியா
Published: 08:55 GMT, Oct 26, 2017 |
0 Comments
1357
This post was written by : Kemasiya
download

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை தாமதமாவதற்கு, விசாரணைக்கான அலுவலகம் அமைக்கும் பணி நிறைவுபெறாமையே காரணம் என்றும் இன்னும் ஓரிரு நாளில் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நேற்று (புதன்கிழமை) நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கலச மஹாலில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக கலச மஹாலின் முன்பு ஏராளமான ஊடகவியலாளர்கள் காத்திருந்தனர். ஆனால் நீதிபதி அங்கு சமூகமளிக்கவில்லை.

இதுகுறித்து விசாரித்தபோது இன்னும் ஓரிரு நாளில் விசாரணை ஆணையத்தின் விசாரணை தொடங்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி காலமானார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அ.தி.முக. மற்றும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

அதைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அரசு அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg