Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு போதுமான பாதுகாப்பு உள்ளதா? ஆராய்கிறது இலங்கை

In கிாிக்கட்
Updated: 08:21 GMT, Oct 26, 2017 | Published: 08:21 GMT, Oct 26, 2017 |
0 Comments
1252
This post was written by : Anojkiyan

பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணிக்கு போதுமான பாதுகாப்பு உள்ளதா? என்பதனை ஆராய இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகள் பாகிஸ்தான் செல்லவுள்ளனர்.

தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக திகழும் பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது ஏற்கனவே தீவிரவாத தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நிலவும் சூழ்நிலை குறித்தும் பாதுகாப்பு குறித்தும் ஆராய எதிர்வரும் 29ஆம் திகதி, இலங்கையின் பாதுகாப்பு பிரிவினர் லாகூர் செல்லவுள்ளனர்.

அங்கு செல்லும் அதிகாரிகள், வீரர்கள் தங்குமிடங்கள் அவர்கள் பயணிக்கும் பாதைகள் என்பவற்றை கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.

மூன்று போட்டிகளை கொண்ட ரி-ருவென்ரி தொடரின் இரு போட்டிகள் நாளை மற்றும் நாளை மறுதினம் அபுதாபியிலும், மூன்றாவது இறுதியுமான ரி-ருவென்ரி போட்டி 29ஆம் திகதி லாகூரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg