Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு டோனி விளையாடுவாரா?

In கிாிக்கட்
Updated: 08:50 GMT, Oct 26, 2017 | Published: 08:37 GMT, Oct 26, 2017 |
0 Comments
1514
This post was written by : Anojkiyan

தடையில் இருந்து மீண்டுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு, டோனி மீண்டும் விளையாடுவாரா என்பது குறித்து ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் தலைவர் ராஜீவ் சுக்லா கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவரான டோனி, மீண்டும் அந்த அணிக்கே விளையாடுவாரா என்பது குறித்து சமீபகாலமாக வாதிப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுவந்தன. இந்நிலையில் இதுகுறித்து ஆராய ஐபிஎல் நிர்வாக குழு கூட்டத்தில் புதிய திட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், ‘கடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்காகவும், புனே அணிக்காகவும் விளையாடிய வீரர்கள் மீண்டும் அவர்கள் பழைய அணிக்கே செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

சென்னை அணிக்காக ரெய்னா, ஜடேஜா, அஸ்வின், டோனி ஆகியோர் ஆடுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இதுகுறித்த முறையான தகவல் விரைவில் தெரிவிக்கப்படும்’ என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg