Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோஹ்லி-அனுஷ்காவின் திருமணம் இத்தாலியில்: திருமண திகதி அறிவிப்பு

In கிாிக்கட்
Published: 09:00 GMT, Oct 26, 2017 |
0 Comments
3000
This post was written by : Anojkiyan
wed

இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி மற்றும் பொலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இத்தாலியில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவர்களது திருமணம் டிசம்பர் 2வது வாரத்தில் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திருமண விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். திருமணத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த திருமண நிகழ்வில் இந்திய வீரர்கள் பங்கேற்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

திருமண திகதியில் இலங்கை அணியுடனான தொடர் நடைபெறவுள்ளதால் அவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் விராட்கோஹ்லி, இந்திய வீரர்களுக்கு இந்தியாவில் மாபெரும் விருந்தொன்றை ஏற்பாடு செய்வார் என நம்பப்படுகின்றது.

கோஹ்லிக்கு ஓய்வு கொடுக்கப்படும்போது ரஹானே அணித்தலைவராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg