Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

2.O இசை வெளியீடு தொடர்பான செய்தியாளர் சந்திப்பு!

In சினிமா
Updated: 09:16 GMT, Oct 26, 2017 | Published: 09:16 GMT, Oct 26, 2017 |
0 Comments
1354
This post was written by : Varshini

லைக்கா புரடக்ஷன் தயாரிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகிவரும் 2.O திரைப்படத்தின் இசை வெளியீடு தொடர்பான செய்தியாளர் சந்திப்பு, துபாயில் தற்போது நடைபெற்று வருகின்றது.

படத்தின் இசை வெளியீடு நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையில், இன்றைய தினம் இச் செய்தியாளர் சந்திப்பு இடம்பெறுகிறது.

இச் செய்தியாளர் சந்திப்பில் லைக்கா குழுமத்தின் தலைவர் திரு.அல்லிராஜா சுபாஸ்கரன், 2.O படத்தின் கதாநாயகனான சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நாயகி எமி ஜாக்ஷன், பொலிவூட் நடிகர் அக்ஷய் குமார், இயக்குநர் சங்கர் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தியாவிலேயே மிக அதிகமான பட்ஜட் செலவில் (400 கோடி ரூபாய்), முற்றிலும் 3டி தொழிநுட்பத்தில் 2.O திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படம் எதிர்வரும் ஜனவரி மாதம் 25ஆம் திகதியன்று வெளியாகவுள்ள நிலையில், அதற்கான வரைகலை (graphics) தயாரிப்பு பணிகள் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

படத்தின் இசை வெளியீடு நெருங்கியுள்ளதால், மூன்று புதிய போஸ்டர்களும் வெளியாகியுள்ளன.

2.o 3 2.o 2 2.o 7 2.o 1 2.o 11 2.o 8 2.o 10 2.o 9

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg