Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விறுவிறுப்பாக உருவாகி வரும் ‘வெண்ணிலா கபடிக் குழு-2’!

In சினிமா
Updated: 09:14 GMT, Oct 26, 2017 | Published: 09:14 GMT, Oct 26, 2017 |
0 Comments
1230
This post was written by : Vithushagan

செல்வசேகரன் இயக்கத்தில் விக்ராந்த் – அர்த்தனா பினு நடிப்பில் ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இதன் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி வரும்நிலையில், முன்னணிக் கதாபாத்திரத்தில் விக்ராந்த் நடித்து வருகிறார்.

கிஷோர், பசுபதி, அனுபமா குமார், சூரி, அப்புக்குட்டி, யோகி பாபு, ரவி மரியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.சுசீந்திரன் இப்படத்திற்கு கதை எழுத, செல்வசேகரன் இப்படத்தை இயக்குகின்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg