Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடாவில் நீண்ட கால பராமரிப்பு இல்லங்கள் மூடப்படும் அபாயம்!

In கனடா
Updated: 10:02 GMT, Oct 26, 2017 | Published: 10:02 GMT, Oct 26, 2017 |
0 Comments
1166
This post was written by : Anojkiyan

கனடாவில் நீண்ட காலமாக இயங்கும் பராமரிப்பு இல்லங்கள் மூடப்படும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

மொத்தமாக எட்டு நீண்ட கால பராமரிப்பு இல்லங்கள் அவர்களின் நடவடிக்கைகளை வேறு இடங்களிற்கு மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

1,200ற்கும் மேற்பட்ட படுக்கைகள் இந்த இல்லங்களில் உள்ள போதிலும், தற்போதைய வடிவமைப்புக்கு இது உகந்ததல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ரொறொன்ரோ பகுதியில் சுமார் 36 நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் 20 தொடர்ந்து இயங்க வேண்டுமாயின் இல்லங்களை மீள அமைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

ஆனால் எத்தனை நீண்ட கால பராமரிப்பு இல்லங்கள் இடமாற்றம் செய்யப்படும், எத்தனை இல்லங்கள் மூடப்படலாம் என்பது குறித்து இன்னும் உத்தியோகபூர்வ தகவல் எதுவும் இல்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg